பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், முஷரப், கபில அதுகோரல, பொதுவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாக குடியிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய மக்களை மீள்குடியேற்றும் முகமாக அப்பிரதேச மக்களால் பல வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அம்மக்களில் முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்தினூடாக தேர்வு செய்யப்பட்ட 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.