திருகோணமலை – மொரவெவ பிரதேசத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 3.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று(12) பிற்பகல் 1.15 க்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கந்தளாய், மொரவெவ, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.