மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருமண்வெளியில் வசித்து வருபவரும், 1992இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரகுவரன் (க.வரதராஜா) அவர்களின் தாயாருமான கணபதிப்பிள்ளை தங்கரெத்தினம் அவர்களின் வீட்டிற்கு புதிதாக மின்சார இணைப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வரும் திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரால் ரூபா 52,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தோழர் ரகுவரன் அவர்களின் தாயார் இதுவரை காலமும் மின்சார வசதியின்றி தனியாக வசித்து வந்த நிலையில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று (14.11.2023) மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி செயலாளர் முரளி, கட்சியின் உபதலைவர் தோழர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்வுதவியை வழங்கிவைத்தனர்.