இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது.  மன்னார் மற்றும் இந்தியா இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும்.