சுகாதார அமைச்சின் செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சில காலம் செயற்பட்டிருந்தார். பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் பதவிகளிலும் அவர் செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, எதிர்வரும் திங்கட்கிழமை (20) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.