தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரிச்சுமை, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்தல் மற்றும் அடக்குமுறை சட்டங்களை இயற்றுவதற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்கந்த சந்தியில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியிருந்தது.

இதன்காரணமாக, நுகேகொடையை அண்மித்த வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை சென்றடைந்ததையடுத்து, மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.