யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர், திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
பொலிஸாரின் தாக்குதலிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக இளைஞரின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 26 வயதான நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.