சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதை அவதானிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசாங்கம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் சிவில் சமூகம், நாட்டின் ஒரு பகுதியாக இருந்தால், மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் நிலையானதாகவும் வலுவானதாகவும் அமையும். ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் சபைக்கு அளித்த கூட்டு அறிக்கையில் இந்தக் கருத்துக்களை, ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 24ஆம் முதல் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை, இலங்கையில் கண்காணிப்பு பணியை நடத்திய பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயங்களை தெரிவித்துள்ளது.