Header image alt text

கழகத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான தோழர் விசுபாரதி (ஜி.ரி.லிங்கநாதன்) அவர்களின் மூத்த சகோதரி திருமதி நாகரத்தினம் கமலாதேவி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று 26.11.2023 காலை வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஏழாம் ஓழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more

வவுனியா பூந்தோட்டம் நகரில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலைகள் மாணவர்களுக்கான சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் ஒளிவிழா நிகழ்வுக்கான நிகழ்வுகள் (25/11/2023 ) வவுனியா நரசிங்கர் ஆலய மண்டபத்தில் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான க. சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்த போது..

Read more

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலத்தில் அத்தியாவசியமானோரை மாத்திரம் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார சபை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அடுத்த வருடம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட 25 வீத சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சன்னங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அகழ்வுப் பணி  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.