Posted by plotenewseditor on 30 November 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 November 2023
Posted in செய்திகள்
யாழில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளில்; கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில், குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, கண்காட்சியுடன், சிறுவர் நாடகங்கள், ஆவணப் படங்கள் வாழ்வியல் பகிர்வுகள், மலையக மக்களின் புள்ளிவிபரப் பதிவுகள் அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
Posted by plotenewseditor on 30 November 2023
Posted in செய்திகள்
2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை(SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். Read more