Posted by plotenewseditor on 1 January 2024
Posted in செய்திகள்
வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1,276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இது வரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது, குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தால் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும், இவ் விசாரணை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட செயலகத்தால் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. Read more