தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் ஜூலை 13ம் திகதிமுதல் ஜூலை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது. Read more
04.07.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ஜஸ்டின் (வைரமுத்து மேகநாதன்) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் இரட்டைக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சுங்கம் மதுவரி மற்றும் இறைவரி ஆகிய மூன்று திணைக்களங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பதை ஜனாதிபதி உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆதரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். பிரித்தானியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. எனினும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார். இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.