சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுமக்கள் இவ்வாறு கண்டனம் தெரிவிக்கின்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை என்பன மூடப்பட்டுள்ளன. Read more
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(08) உத்தரவிட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா இன்று கடமைகளை பொறுப்பேற்றார். வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டபத்தில் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டார்.