பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று  காலை நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் நிலவும் அரச வெற்றிடங்கள், காணி விடுவிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் குருநகரில் தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி பொதி இதன்போது ஒருவருக்கு 20 கிலோகிராம் வீதம் வழங்கப்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இன்றைய கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவி விக்னேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், த. சித்தார்த்தன் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.