கண்ணாட்டி கணேசபுரம் கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு முன்பள்ளிச் சிறார்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அங்குள்ள குழாய்க் கிணறுக்கான மோட்டர் இயந்திரம் மற்றும் அதற்குரிய வயர் உள்ளிட்ட உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் செல்வி. அஷ்ரா குலசேகரம் அவர்களின் 10வது பிறந்தநாளை (21.07.2024) முன்னிட்டு மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் வற்றாப்பளை வட்டார பொறுப்பாளர் டொமினிக் புஷ்பராஜா, கட்சியின் செயற்பாட்டாளர் தமிழினியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
