டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலிகளை உடனடியாகப் பிரித்தானியாவுக்கு இடமாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாம்மியினால் அதன் உள்துறை செயலாளர் யவெட் கூப்பருக்கு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்தியப் பெருங்கடல் பகுதி ஆணையாளரின் எச்சரிக்கையான கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 நாட்களுக்கு மேலாக டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 சிறுவர்கள் உள்ளிட்ட 60 இலங்கை ஏதிலிகளின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான ஆணையாளர் அறியப்படுத்தியுள்ளார்.