நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 332 ரூபாவாகும். 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. Read more
30.08.2024 மல்லாவியில் தேர்தல் பரப்புரைகளில் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்கள்,
30.08.2024 மல்லாவியில் தேர்தல் பரப்புரைகளில் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்கள்,
கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் கைதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அமல் சில்வா தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் கடுவலை நீதவான் முன்னிலையில் பிரச்சன்னப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
30.08.1991 – 30.08.2024
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 02.09.2024ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.
சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு மாகாண உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன. இதற்கமைய யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான பேரணி காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்இ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
இலங்கையின் நெடுந்தீவுஇ நயினாதீவு மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு முறையில் முன்னெடுக்கப்படவுள்ள எரிசக்தி வேலைத்திட்டத்திற்கான முதலாவது கொடுப்பனவு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவிடம் குறித்த கொடுப்பனவு கையளிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.