உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு எந்தவகையிலும் ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்காது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு திட்டமிட்டவகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தாதுவிட்டமை அடிப்படை உரிமை மீறல் என்றும், அந்தத் தேர்தலைக் கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.