07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி (முருகானந்தம் – பாலையூற்று), தமிழ் வேந்தன்(சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம் – பளை), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் (யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை), சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) சிறீகாந்த் (அடம்பன்தாழ்வு) ஆகியோரினது 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
புளொட் ஜெர்மன் கிளை அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களது செல்வப்புதல்வியான மணமகள் சுபாங்கி, மணமகன் மார்க்கோ ஆகியோரின் திருமண நாளை (07.09.2024) முன்னிட்டு, புளொட் ஜெர்மன் கிளையின் அனுசரணையில் இன்று வற்றாப்பளைப் பிரதேசத்தில் விசேட மதிய விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது.
மலர்வு : 1960.10.25
அஞ்சல் மூல வாக்களிப்பின் போதுஇ வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு இந்த முறைப்பாட்டை காவல்துறையில் பதிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் தத்தெடுப்பது முழுமையாக நிறுத்தப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாகச் சீனக் குழந்தைகள் வெளிநாடுகளில் உள்ளவர்களால் தத்தெடுக்கப்பட்டனர். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சீனக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெண் குழந்தைகளே அதிகமாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைக் கோரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க முதலில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் ஆதரவைக் கோருவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.