எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளையுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். Read more
13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அடுத்த மீளாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் Julie Kozack இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு காலம் தொடர்பில் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.