
Posted by plotenewseditor on 15 September 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 15 September 2024
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற சஜித் ஆதரவு மக்கள் கூட்டத்தில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேடையேறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருந்தது. Read more
Posted by plotenewseditor on 15 September 2024
Posted in செய்திகள்
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உடனடியாக பதவி விலகியதை அடுத்து அந்த சங்கத்தின் பதில் தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன கடந்த 13 ஆம் திகதி பதவி விலகினார். ஜப்பான் ஜய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆலோசனை சேவை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 15 September 2024
Posted in செய்திகள்
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. X பதிவின் ஊடாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்( Julie Chung) இதனை கூறியுள்ளார். சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 15 September 2024
Posted in செய்திகள்
பல்வேறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 22 பேரும், சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 கண்காணிப்பாளர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், தங்களது அழைப்பின் பேரில் அயல் நாடுகளைச் சேர்ந்த 7 கண்காணிப்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.