
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
06ம் ஒழுங்கை, கோயில்புதுக்குளம், வவுனியாவைச் சேர்ந்த திரு. இரட்ணசிங்கம் தயாபரன் அவர்கள் நேற்று (16.09.2024) திங்கட்கிழமை காலமானார். இவர் தோழர் (ஐ) சுரேஸ்குமார் மற்றும் அமரர் தோழர் ரமேஸ் (ரமேஸ்வரன்) ஆகியோரின் அன்புச் சகோதரர் ஆவார். அன்னாரின்பிரிவால் துயரடைந்திருக்கும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கின்றோம். இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறும்.
தொடர்புகட்கு: (76) 900 4415 ( சுரேஸ்)
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனூடாக தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ள நிலையில்இ கொழும்பு நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம் கிராண்ட்பாஸ் – பலாமரச் சந்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை- டவர் மண்டபத்துக்கு முன்பாகவும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் முதலாம் பாகத்திலிருந்து மூன்று வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் வட்ஸ்அப் செயலிமூலம் பகிரப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். Read more
Posted by plotenewseditor on 17 September 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டிற்கு வந்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.