Header image alt text

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று இடம்பெறுகிறது.

Read more

செயலதிபர் அமரர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க ஆலோசனையுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் மக்கள் முன்னணியாக உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று முப்பத்தாறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

Read more

18.09.1998ல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் யோகன் (பூபாலப்பிள்ளை யோகநாதன்), ஜெகன் (ஜெகநாதன் ஜெயக்குமார்) ஆகியோரின் 26ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சில பெற்றோர்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் ஆசிரியர் ஒருவரால் பகிரப்பட்டதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது. Read more

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல் மற்றும் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,737 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்றுமாலை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, நேற்று 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 4,209 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம் பேரணி துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். Read more