இன்று
இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹல் தல்துவ தெரிவித்தார். Read more
மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் அமரர் கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.
21.09.1988இல் நீர்கொழும்பில் மரணித்த தோழர்கள் சுரேஸ் (இ.சுந்தரேசன்), கருணா (அச்சுவேலி) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
21.09.1999ல் மரணித்த அமரர் தோழர் கண்ணாடி மாமா (கந்தையா கோபாலப்பிள்ளை – நொச்சிமுனை) அவர்களின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று…
21.09.2021 இல் மரணித்த தோழர் குரு (ஆறுமுகம் பொன்னுத்துரை) அவர்களின் 03ஆம் ஆண்டு நினைவுகள்…
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடைபெற்று வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1,204 மத்திய நிலையங்களில் இன்று காலை முதல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் இந்த வாக்குகள் எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் 78 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் 4 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது. தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,954 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாகக் கடந்த ஜூலை மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,652 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.