2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவிதித்துள்ளது. இதற்கமைய, விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.
2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
வன்னி தேர்தல் மாவட்டத்தில்
நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள்