Header image alt text

ஆட்சி மாற்றத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவி விலகி வருகின்றனர். அந்த வகையில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸும் தற்போது பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஊவா மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஏ.ஜே.எம் முஸம்மில் பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அநுர விதானகமகே நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவும் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும் மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பாடுபட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை பதவியேற்றதை அடுத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதோடு ஜனநாயக கடமை நின்றுவிடாது. Read more

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று(23) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.