காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கையை வௌியிட்டுள்ளது. குறித்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட பணிக் குழாத்தினருக்காக வழங்கப்பட்டவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அடங்குகின்றன. Read more
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பிரதான ஆர்ப்பாட்டம் கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வௌியானதாக கூறப்படும் முதலாம் வினாத்தாளின் 3 வினாக்களுக்காக அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு நேற்று(29) அறிவித்திருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அதற்கமைய தபால் மூல விண்ணப்பங்களின் ஒருபகுதி தேர்தல் ஆணைக்குழுவிடம் நேற்று(29) கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய விண்ணப்பங்கள் இன்று(30) கையளிக்கப்படவுள்ளன.