05.10.1998இல் மன்னாரில் மரணித்த தோழர் கோபு (கந்தசாமி தமிழ்வாணன்- நெடுங்கேணி) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
05.10.1998இல் மன்னாரில் மரணித்த தோழர் கோபு (கந்தசாமி தமிழ்வாணன்- நெடுங்கேணி) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
பொது போக்குவரத்து சேவைக்காக பஸ் உள்ளிட்ட வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதியில் இருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு தொடக்கம் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இவை 3 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சபுமல் குமார இதனைத் தெரிவித்தார். இதன்படி தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி காவல்துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பணிப்பாளராகக் கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலே நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இணக்கப்பாட்டைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.