Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
16.10.2018இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரமேஷ் (பெரியண்ணன் ஜெகதீஸ்வரன் – வவுனியா) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
“உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி சகல மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் வகையில் பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார். அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ரிரிஜி ஏசியாவிற்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
இலங்கையில் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பில் கியூப அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரெஸ் மார்செல்லோ தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கியூப அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்புத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று முற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 966 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளன. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் 7ஆம் 8ஆம் திகதிகளில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.