அனைத்து தொடருந்து மார்க்கங்களிலும் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொம்பனிதெரு தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம் புரண்டது.

இந்நிலையில் குறித்த தொடருந்தை மீள தரமேற்றி அதனை மருதானை தொடருந்து முனையத்துக்குக் கொண்டு செல்லும்போது மருதானை தொடருந்து நிலையத்துக்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.