Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்திலிருந்து மெகசின் ஒன்றும்இ ரீ 56 ரக தோட்டாக்கள் 57 உம் மீட்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 12:10 அளவில் பெலியத்த தொடருந்து நிலையத்தைச் சென்றடைந்த 8050 என்ற இலக்கம் கொண்ட தொடருந்தின் 3ஆம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்குக் கீழிருந்த பையொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டதாக பெலியத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிலுவையிலுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய வேதன உயர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 29 October 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more