Header image alt text

இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இராணுவ தலைமையகம் பொதுமக்களைக் கோரியுள்ளது. இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, பொறுப்பற்ற வகையில் சமூக ஊடக செயற்பாட்டார்கள் சிலர் போலி தகவல்கள் அடங்கிய காணொளியைப் பதிவேற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். Read more

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால் முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சம் ஏற்படுமாயின் இன்று முதல் 1997 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங் இந்த உதவித் தொகையை உத்தியோகப்பூர்வமாகக் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்
(தோழர் ஆனந்தியண்ணர்)
மலர்வு : 16.05.1945
உதிர்வு : 22.10.2021
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), அதன் வெகுஜன முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில்,
அவருடன் இணைந்து கடந்து வந்த பாதையின் அனுபவங்களை மீண்டும் நினைவிற் கொள்வதன் மூலம் எமது அஞ்சலிகளை கணிக்கையாக்குவோம்.

Read more

சர்வதேச பொருளாதாரத்தில் மாற்று அணியாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) அமைப்பின் வருடாந்த மாநாடு ரஷ்யாவின் தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது. ரஷ்யாவின் Kazan நகரில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு இடம்பெறுகின்றது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவின் தலைமையிலான குழு நேற்று ரஷ்யாவிற்கு பயணித்துள்ளது. Read more