சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா – இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டது. Read more
22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று..
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அறிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களின் விதிமுறைகளுக்கு முரணாகவே, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான தினம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று(20) நாட்டிற்கு வருகை தந்திருந்தார். Samoa நாட்டில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதற்கமைய, வௌிவிவகார அமைச்சர் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று சந்தித்துள்ளார்.