
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரசாயன விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியரான அவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். 1997ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வெய்ன் அரச பல்கலைக்கழகத்தில் (Wayne State University) கலாநிதி பட்டம் பெற்ற அவர், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள், இரசாயனம் மற்றும் போசாக்கு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை வழிநடத்தியுள்ள பிரதான விரிவுரையாளராக காணப்படுகின்றார்.
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 17 October 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தகவல்களை உரிய முறையில் அறிந்துகொள்வதற்காக பஃவ்ரல்(PAFFREL) அமைப்பு விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களின் ஊடாக அதனை வாக்காளர்களுக்காக வௌியிடவுள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘உங்கள் எதிர்கால பாராளுமன்ற உறுப்பினரை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
16.10.2018இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரமேஷ் (பெரியண்ணன் ஜெகதீஸ்வரன் – வவுனியா) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.Posted by plotenewseditor on 16 October 2024
Posted in செய்திகள்
“உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி சகல மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் வகையில் பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. Read more