இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” 2023ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” என்ற பெயர் மாற்றப்பட்டு, “திருவள்ளுவர் கலாசார மையம்” என அண்மையில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கட்டடத்தில், ” யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என இன்று(24) பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது.