தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் இன்று பிற்பகல் 14.00 மணியளவில் (02.03.2025) அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

Gemeinschaftsraum, Zweierstr 105, 8003 Zurich என்னும் முகவரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வினை தோழர் தீபன் அவர்கள் ஆரம்பித்து வைக்க, தோழர்கள் சிவா, குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
ஆரம்ப நிகழ்வாக திருமதி இரட்ணகுமார், அரிராஜசிங்கம், தோழர் வசந்தன் ஆகியோர் நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து தோழர் ஆர்.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கழகத்தின் சுவிஸ் தோழர்கள், தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.