கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி கந்தானை – வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி குறித்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் 27 வயதான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை தற்போது கொழும்பு குற்றப்பிரிவினர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.