அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (04) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் நுழை வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பதாதைகளையும் ஏந்தி ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் பாதீட்டில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துக் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இம்முறை பாதீட்டில் அதிரடியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும்இ வேதன உயர்வு என்ற பெயரில் தமக்கான வேதனம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.