இந்த ஆண்டு மொத்தமாக 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை, 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புத்திக மனதுங்க கூறினார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட எட்டு உந்துருளிகள், இரண்டு மகிழுந்துகள், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு வேன் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.