கொழும்பு கிராண்ட்பாஸ் – நாகலம் வீதியில் நேற்றிரவு(17) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸைச் சேர்ந்த 22, 28 வயதான 2 இளைஞர்களே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர். Read more
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த சிறைக்காவலரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையில் கார் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காரொன்றில் வருகை தந்த மூவர் தம்பதியினரை அச்சுறுத்தி கார், நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லஃபார் தாஹீர் தலைமையிலான நீதிபதிகள் குழாத்தினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த அஞ்சல் ஊழியர்களின் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. துறைசார் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இருந்து ஒரு குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர சபை உள்ளிட்ட சில சபைகளில் சுயேச்சை அணியாக போட்டியிட முயற்சிக்கின்றதா?
வெலிகம பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த ஏனைய 6 சந்தேகநபர்களையும் கைது செய்ய வேண்டாம் என சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியும் அவரது அமைச்சரவையும் நேற்று(14) பதவியேற்ற நிலையில் இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி அந்நாட்டின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவியேற்றுள்ளார். கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று(14) பதவியேற்றதையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.