உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ள அரசியல்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. சரியாகவும், முறையாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுவின் ஒரு பிரதியை மாத்திரம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அனைத்து ஆவணங்களையும் உரிய காலப்பகுதியில் தங்களின் மாவட்ட தெரிவத்தாச்சி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவிக்கிறார். Read more
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு அடுத்த மாத முற்பகுதியில் இங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(15) தெரிவித்தார். வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
14.03.2021 ல் மரணித்த தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன் -செட்டிபாளையம்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுகள்…
அம்பலாங்கொடை இடம்தோட்டை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் பின்னணியில் பல பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்கள் இருப்பது சமீபத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கடந்த காலங்களில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்பைப் பேணியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன. கபொத சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் 26 ஆம் திகதி நிறைவு பெற உள்ளன. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தீர்வு கோரி இலங்கை கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்திருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இன்று முதல் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப் பணத்தை நேற்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர் திரு. ஹென்றி மகேந்திரன் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார். இதேவேளை இன்று காலை சுப வேளையில் காரைதீவு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு ப, ரவிச்சந்திரன் (சங்கரி) அவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. மன்னார் நகரசபை, நானாட்டான் பிரதேசபை, மாந்தை மேற்குப் பிரதேச சபை, முசலிப் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட தேர்தல் முகவரும் ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளருமான திரு. வசந்தன் அவர்கள் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார்.