உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
மன்னாரில் 484 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளதாக இலங்கைக்கான Adani Green Energy நிறுவனத்தால் எரிசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதனுடன் தொடர்புடைய பரிமாற்ற கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்த்துள்ளதாக Adani Green Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேசபை, மாந்தை கிழக்குப் பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் புளொட் அமைப்பின் பொருளாளருமான கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார்.
தேஷபந்து தென்னகோனை காணும் இடத்தில் கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நிதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ராமன்த ஜயமகவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இரத்துச்செய்து ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கான காரணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை – திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள முக்கியமான தேசியப் பாடசாலைகளில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிப்பதான கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக தரவுகளுடன் இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு மனோ கணேசன் முன்வைத்திருந்தார்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களில் ஐவர் ஏற்கனவே அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
09.03.2022இல் மரணித்த தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள்