Header image alt text

கேள்வி :
1) எத்தகைய இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் புதுக் கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன?
2) உள்ளூராட்சி மன்ற வாரியாக ஆசனப் பங்கீட்டுத் தீர்மானங்கள் எத்தகைய அடிப்படையில் எடுக்கப்படும்?
3) தேர்தலின் பின்பு மன்றங்களில் வேறு கட்சிகளோடுஇணைந்து ஆட்சியமைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளனவா?
4) மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதே கூட்டணியாகவே போட்டியிடுமா?
5) தற்போது ஏழு கட்சிக் கூட்டணியாக உள்ள கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் பொறிமுறை எவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது?

Read more

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாதிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை விரைவில் வழங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதிவாதிகளிடம் விளக்கங்களை கோராமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Read more

உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வர் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, மட்டக்களப்பு பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் M.N.S.மென்டிஸ் மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.J.சேனாதீர Read more

மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 க்கு புறப்பட்ட இந்த விமானம், பேங்கொக் சென்று மாலை 4.20 க்கு மீண்டும் நாடு திரும்பியது. Read more

இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்தியாவின் திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே தினசரி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி குறித்த விமான சேவை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி ஆரம்பமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவை வாரத்தில் ஆறு நாட்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். Read more

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று நடைபெற்றது. 2023 மார்ச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. Read more