யாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த திரு. அப்பாத்துரை பாலச்சந்திரன் (ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்) அவர்கள் இன்று (07.03.225) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இவர் எமது கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆசிரியர் பா. கஜதீபன் அவர்களின் அன்புத் தந்தையார் ஆவார்.
நடைபெறவிருக்கும் பிரதேச சபை தேர்தலில் தமிழ் தரப்பினர் தமது பலத்தினை காண்பித்து தமிழ் தேசியம் மற்றும் தமிழர்களின் இருப்பிற்கான போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான தேவையும் அவசியமும் உள்ளது. எமது உரிமைகளுக்கான நீண்ட கால போராட்டம் மற்றும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்த போதும், தமிழ் மக்களுக்கான உரிய இறுதி தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை.
வெலிகம காவல்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழுவொன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர்கள் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையைப் பார்வையிட்டனர்.
ஒஸ்ரியாவை சேர்ந்த பெண் ஒருவரிடம் 50,000 ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கொள்ளுப்பிடிய காவல்துறையின் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு கையூட்டல் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் தொலை காணொளி மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானின் ஜய்கா நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றல் பத்திரத்தில் இன்று (07) கைச்சாத்திடவுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிவ் இசோமடா மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தனவுக்கு இடையே இந்த கைச்சாத்து நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு மொத்தமாக 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை, 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.