ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு பாதீடு திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. Read more
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகங்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எமது அண்டைய நாட்டுக்காக எமக்கு ஒரு பொறுப்பு உள்ளதைப் போன்று எமது அண்டைய நாட்டுக்கும் அவ்வாறான பொறுப்பு உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PINS ASLAT’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுக்கமைய கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த NS ASLAT’ என்ற போர்க்கப்பல் 123 மீற்றர் நீளமும், மொத்தம் 243 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது.
உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் நடாத்திய கலந்துரையாடலில், ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறித்து, அதன் தலைவர்களில் ஒருவரான திரு. சரவணபவன் அவர்கள் தெரிவித்ததாக வெளிவந்த அறிக்கை குறித்து அவர் இன்று பதிவு செய்திருந்த கருத்து –
டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை தொடர்பில் இதற்கு முன்னர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (05) இந்த கடிதம் வழங்கப்பட்டது.
மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8 வயது மகள்இ9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர்.
கடந்த 22 ஆம் திகதி முதல் இது வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களில் முப்படைகளிலிருந்து தப்பியோடியவர்களுக்குத் தொடர்புள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.