கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், உந்துருளியில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். Read more
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக இன்று பிற்பகலில் அறிவித்தது. கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாஸ இதனை உறுதிப்படுத்தினார். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான தலையீடுகளை மேற்கொண்டுள்ளதால் பணிப் பகிஷ்கரிப்பை பிற்போடுவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சரணடைந்த வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமாரிற்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகக் கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டமோ அல்லது வன்முறை செயல்களோ நடத்த அனுமதிக்க மாட்டாது எனவும்,
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குரிய அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பதன் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (04) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் நுழை வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பதாதைகளையும் ஏந்தி ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி கந்தானை – வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி குறித்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.