இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (4) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக பணியாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (04 ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். போர்க்கப்பலானது 91.16 மீட்டர் நீளமும் 129 நிர்வாக குழுவினரையும் கொண்டுள்ளது. 
வைத்தியர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு காணப்படாத நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற செயற்குழு அவசர கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் M.M.S.K.பண்டார மாபா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக செயல்முறையைச் சீர்குலைக்கும் நோக்கில் குழுவொன்று முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் இன்று பிற்பகல் 14.00 மணியளவில் (02.03.2025) அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மேற்கொண்ட தேர்தல் கூட்டணி பற்றிய கலந்துரையாடலின் இன்றைய நிலை என்ன? சில கட்சிகள் உள்வரும் செய்திகளால் உள்ளிருக்கும் சில கட்சிகள் வெளியேறுகின்றனவா?