தண்ணீறூற்று முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் வரதப்பா (வைத்திலிங்கம் கணேசலிங்கம்) அவர்களின் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் இன்று (02.03.2025) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மலர்வு : 1956.08.12
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(28) உத்தரவிட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர். மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த பின்னர் யாழ். சுதுமலை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் உந்துருளியில் பயணித்த இரு இளைஞரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுதினம்….
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் நேரில் பேசுவதற்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்து பின்னர் பிரிந்து சென்ற ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுக்குக் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (1) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.