ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘Asahi’ என்ற கப்பல்இ வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் வருகை தந்தவர்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். Destroyer வகைக்குச் சொந்தமான ‘Asahi’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம் கொண்டது. Read more
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கான மற்றுமொரு தவணை கடனுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மூன்றாவது மீளாய்விற்கான கடன் தவணையை விடுவிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.