பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கலேவல பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தினால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த lதிருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள்…
கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுகள்…
சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது காவல்துறை திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் ஒரு குழு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(18) காலை 7 மணி முதல் நாளை(19) காலை 7 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் நேற்று(17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.